விழுப்புரம் -ஆகஸ்ட் – 30,2021
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுதலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனை அடுத்து கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா. IPS குத்துவிளக்கேற்றி, மரக்கன்றுகள் நட்டு நிலைய பொது நாட்குறிப்பை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் கோட்டகுப்பம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
அருண், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் நமச்சிவாயம்,
ஆனந்தராஜன், . நந்தினி, கோட்டக்குப்பம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர்கள் தேவரத்தினம்,
முத்துக்குமார், . சுகன்யா உட்பட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.