சென்னை – ஆகஸ்ட் -11,2021
பெரியமேடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு , சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல், கீழ்ப்பாக்கம் மாவட்டம், பெரியமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும், சென்னையில் உள்ள அனைத்து வகையான கால்நடைகளுக்கும் இங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்களுடைய செல்லபிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இங்கு அழைத்து வருகின்றனர். இப்பகுதிகளில் குற்றம் ஏதும் நடைபெறாவண்ணம் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கவும் இக்கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டியது அவசியம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,உத்தரவின்பேரில், மருத்துவர் கண்ணன், இ.கா.ப., காவல் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர், (தெற்கு) வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரி வளாகத்தினுள் புறக்காவல் நிலையம் ஒன்று நிர்மானிக்க தீர்மானித்து அதற்குண்டான பணிகளை மேற்கொண்டதின் விளைவாக 11.08.2021 அன்று மேற்படி பெரியமேடு கால்நடை மருத்துவமனை கல்லூரி வளாகத்தினுள் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு மருத்துவர் செல்வகுமார், Ph.D., Vice Chancellor, TANUVAS மற்றும் மருத்துவர் திரு. S. பாலசுப்ரமணியன், Ph.D., Director of Clinics, TANUVAS முன்னிலையில் காவல் கூடுதல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு ( தெற்கு ) மருத்துவர் கண்ணன், இ.கா.ப. திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் தற்போது தமிழக காவல்துறையில் காவல் துணை ஆணையாளர்களாக உள்ள மருத்துவர் பாலகிருஷ்ணன், இ.கா.ப., மருத்துவர் சாமிநாதன், இ.கா.ப. ஆகியோர் கலந்து கொண்டார்