81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு- என்.ஐ.ஏ. மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர்...

கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு- என்.ஐ.ஏ. மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் தீவிரம்.

கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 19,2021

கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூகவலைதள கணக்குகளை என்.ஐ.ஏ., மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட, ஐந்து வலைதள கணக்குகளை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

கோவையிலும் ஒரு சிலரின் சமூகவலைதள பதிவுகளை சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

கோவையில் ஏற்கனவே ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டு லேப்டாப், சி.டி., கைப்பற்றினர்.

கேரளா, கனகமலை பகுதியில், 6 ஐ.எஸ்., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் சோதனையிட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கோவையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், ‘கேரளா மற்றும் கோவையில் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், தற்போது கோவை மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களின் சமூகவலைதள கணக்குகள், அவர்களின் கருத்துக்கள், இவர்கள் யாரை பின்தொடர்கிறார்களா போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

சட்டவிரோத கருத்துக்களை யார் பதிவு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக, 15க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்