திண்டுக்கல் – ஆகஸ்ட் – 30,2021
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் இதனையடுத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவா , தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் இளநிலைப் பொறியாளர் ரங்கநாயகி,
பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர்பாலமுருகன்,
பழனி போக்குவரத்து காவல்ஆய்வாளர்
தட்சிணாமூர்த்தி, பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் நிலைய போலீசார், வர்த்தக சங்க அமைப்பினர் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.