திருநெல்வேலி – ஆகஸ்ட் – 28,2021
திருநெல்வேலி சரக அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று இடங்களை பிடித்து பெருமை சேர்த்த நெல்லை மாநகர காவல் துறை.
தென்மண்டல காவல்துறை காவல் உயர்அதிகாரிகள் மற்றும் திருநெல்வேலி சரக காவல் கண்காணிப்பாளர்கள் 12 பேர் கலந்து கொண்ட துப்பாக்கி சுடும் போட்டி இன்று வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் கலந்து கொண்ட நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ் குமார் காவல் கண்காணிப்பாளர்கள் அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும், காவல் கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர்கள் அளவில் நடந்த போட்டியில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பாதுகாவலர் ராமநாராயணன் முதல்நிலை காவலர் முதலாம் இடத்தையும், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் அவர்களின் பாதுகாவலர் கஜேந்திர பிரபு காவலர் இரண்டாம் இடத்தையும், பெற்று நெல்லை மாநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்தார்கள்
இப்போட்டியில் வென்ற அனைவருக்கும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப விருது வழங்கி பாராட்டினார்