திருநெல்வேலி – ஆகஸ்ட் -15,2021
75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப., , திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு இ.கா.ப.,, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு ) மற்றும் சுரேஷ்குமார் போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக் கொடியை ஏற்றி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர் 31 பேர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.