திண்டுக்கல் – ஆகஸ்ட் – 25,2021
ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து, விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என பொதுமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்
இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை மாவட்ட ஆட்சியர் விசாகன். இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இணைந்து திறந்து வைத்தார்கள். இப்பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படங்கள், தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு புகைப்படங்கள், மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய புகைப்படங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் பார்வையிட்டனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த அரசு மற்றும் தனியார் துறை பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து அவர்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் கூறி விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்கச் செய்தார்
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவர்கள் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி மற்றும் போக்குவரத்து காவலர்கள், பொதுமக்களும் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்