86 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு -இருவர் மீது குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு -இருவர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி – ஆகஸ்ட் -12,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் உட்பட 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

விளாத்திகுளம் வி. தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22) என்பவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்ததில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த சிறுமியின் ஜாதியை காரணம் காட்டி அவதூறாகவும் பேசியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து கடந்த 23.07.2021 அன்று மேற்படி எதிரி காளிராஜை கைது செய்தார். இவ்வழக்கின் எதிரியான காளிராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல்; துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்குளம் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் கடந்த 12.07.2021 அன்று, ஸ்ரீவைகுண்டம் வெள்;ர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (எ) தோல்மூட்டை மகன் சுப்பையா (எ) சுரேஷ் (31), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கி (29), வெள்ளூர் வண்டிமலைச்சியம்மன் கொவில் தெருவை சேர்ந்த தளவாய் மகன் சுபாஷ் (22) மற்றும் தெற்கு காரசேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (29) ஆகியோர் உட்பட 10 பேர் மேற்படி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்களிடம் தகராறு செய்து நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களையும், நிறுவனத்தின் 69 சோலார் பேனர்களையும் கற்களால் சேதப்படுத்தி உள்ளனர். இதனை தட்டிகேட்ட அந்நிறுவனத்தின் வாட்ச்மேனாக பணிபுரியும் உடையார்குளம் பகுதியை சேர்ந்த இனாமுத்து மகன் சங்கரசுப்பு என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா (எ) சுரேஷ், இசக்கி, சுபாஷ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான சுப்பையா (எ) சுரேஷ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப 1)விளாத்திகுளம் வி. தளவாய்புரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் மற்றும் 2) ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (எ) தோல்மூட்டை மகன் சுப்பையா (எ) சுரேஷ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் . விஜயலெட்சுமி ஆகியோர் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்