தூத்துக்குடி -ஆகஸ்ட் -05,2021
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்வதற்காக கடந்த 28.07.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் ஆகியோரும் சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். அப்போது ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் அரசு புறம்போக்கு நிலத்தை காட்டியுள்ளார். பின்னர் அதிகாரிகள் பார்வையிட்டு சென்ற பின்னர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த நங்கையப்பன் மகன் கொம்பையா (49) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (23) ஆகிய இருவரும் ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று நாங்கள் அனுபவித்து வரும் இடத்தை அருங்காட்சியம் அமைப்பதற்கு அதிகாரிகளிடம் நீ எப்படி காட்டாலாம் என கூறி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவரிடம் தகராறு செய்து அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொம்பையா மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான கொம்பையா மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹமது நகர் பகுதியைச் சேர்ந்த நங்கையப்பன் மகன் 1) கொம்பையா மற்றும் அவரது மகன் 2) மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் எ இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.