திண்டுக்கல் – ஆகஸ்ட் – 06,2021
கொரோனா நோய்தொற்று மூன்றாம் அலை குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார்.
கடந்த 5ம்தேதி மேட்டுப்பட்டியில் உள்ள பாஸ்கா திடலுக்குச் சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சமூக அங்கிருந்த பொதுமக்களிடம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் எனவும், மேலும் கொரோளா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதிமொழி ஏற்க செய்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் உடனிருந்தனர்.
மேலும்,நிலக்கோட்டை காவல் நிலைய சரகம் கரியாம்பட்டி கிராமத்திற்குச் சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அங்கிருந்த பொதுமக்களிடமும் கொரோனா மூன்றாவது அலை விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகளை வழங்கிளார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.