கன்னியாகுமரி – ஆகஸ்ட் -23,2021
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆண்கள், 06 பெண்கள் உட்பட 26 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தங்களது பணியினை திறம்பட செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.