திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
சொத்து வரி ரசீது போலியானதா? மேலப்பாளையம் மக்கள் அதிர்ச்சி! ★★★★★★★★★★★★★★★ நெல்லை, மேலப்பாளையம் ஹாமீம் புரம் 5- வது தெருவில் வசித்து வருகிறார்.மேலும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் தெற்குப் பகுதி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சேக் முகைதீன் தன் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.விண்ணப்பத்திற்கான பாதாள சாக்கடை ரசீது,சொத்து வரி ரசீது உள்ளிட்ட அனைத்து டாக்குமெண்ட்டின் நகல்களையும் இணைத்துள்ளார்.இதனை சரிபார்த்த அதிகாரிகள் இவர் கட்டிய சொத்து வரி கட்டிய ரசீது போலியானது என்றும் குடிநீர் இணைப்பு கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற சேக் முகைதீன் தமுமுக மமக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறினார்.அப்போது மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதின் தலைமையில் மமக மாவட்ட துணை செயலாளர் அ.காஜா,பகுதி நிர்வாகிகள் சேக்மதார் , அப்துல் காதர், அல்ஜன்னத் செய்யது அலி ஆகியோர் சேக் முகைதீனுடன் சென்று மேலப்பாளையம் மண்டல அதிகாரிகளை நேரில் சென்று விளக்கம் கேட்டனர்.அப்போது அதிகாரிகள் இதனை மூன்று நாட்களுக்குள் சொத்து வரி ரசீதின் நகலை சென்னைக்கு அனுப்பி விளக்கம் கேட்போம் என்றார். இவர் ஒருவர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கும் நிலையில் மண்டல அலுவலகத்தில் பணம் கட்டிய ரசீது போலியானது என சொன்னதால் இன்னும் எத்தனை பேர் ரசீது போலியானது என வருமோ என்ற பதற்றத்தில் மேலப்பாளையம் மக்கள் உள்ளனர்.இங்கு நடந்திருப்பது ஊழலா? இதற்கு யாரெல்லாம் உடந்தை என்ற விபரத்தை அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும் இதுவே பொதுமக்களின் விருப்பம்.