கன்னியாகுமரி -ஆகஸ்ட்-14,2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வுகளை பார்வையிட்டார். மேலும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் ஒத்திகையில் கலந்து கொண்டார். ஒத்திகை ஏற்பாடுகளை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . நவீன் குமார் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் பல காவல் அதிகாரிகள், காவல் ஆளினார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.