83.1 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "35,பேர் மீது குண்டாஸ் 109,ரவுடிகள் கைது காஞ்சி எஸ்.பி அதிரடி நடவடிக்கை.....

“35,பேர் மீது குண்டாஸ் 109,ரவுடிகள் கைது காஞ்சி எஸ்.பி அதிரடி நடவடிக்கை…..

காஞ்சிபுரம் – ஆகஸ்ட்- 01,2021

காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டதின் பேரில், மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு ரவுடி தணிகா (எ) தணிகைவேல் த/பெ மணி, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம என்பவனையும், அவனது வலது கரமாக செயல்பட்டு வரும் கூட்டாளியான சரித்திர பதிவேடு ரவுடி வசா (எ) வசந்த், காஞ்சிபுரம் என்பவனும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருப்பெரும்புதூர் உட்கோட்டம், சோமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி மேத்யூ, த/பெ.சேகர், மணணடியம்மன் கோயில் தெரு, எருமையூர், இவர் ஏழு கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகளில் சம்மந்தப்பட்டவரை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதின்பேரில் மேற்படி பிரபல ரவுடிகள் அனைவரும் சிறையில் உள்ளனர். மேலும் இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலைய பிரபல ரவுடி ராஜா (எ) வசூல் ராஜா, த/பெ.அலெக்ஸாண்டர், மாமல்லன் நகர், காஞ்சிபுரம், மணிமங்கலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு ரவுடியான அருண் (எ) ஏம்பா அருண், த/பெ.கமலக்கண்ணன், கரசங்கால் கிராமம் உட்பட இவ்வாண்டில் மட்டும் 109 சரித்திர பதிவேடு ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவர்களில் 35 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருப்பெரும்புதூர் உட்கோட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவடிகள், PPGD சங்கர் த/பெ தர்மலிங்கம், வளர்புரம் மற்றும் குணா (எ) படப்பை குணா, மதுரமங்கலம் கிராமம் ஆகியோர் தாங்கள் திருந்தி வாழ நினைப்பதாகவும், தங்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை பரிசீலனை செய்து திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களை ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 காவல் நிலையங்களில் உள்ள 246 சரித்திர பதிவேடு ரவுடிகளை எவ்வித குற்ற செயல்களில் ஈடுபடாமலிருக்க வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களிடமிருந்து ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. நன்னடத்தையில் பெறப்பட்ட ரவுடிகள் மீண்டும் நன்னடத்தை பிணையை மீறி ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் மேலும் கூறியதாவது பொதுமக்கள், வணிக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்த எண்ணும் எவராயினும் சட்டத்தை கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் காரணமாக தலைமறைவாக இருந்துவரும் பிற ரவுடிகளையும் பிடிக்க இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்