அரியலூர் – ஆகஸ்ட்-01,2021
அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி கிராமத்தில் உள்ள EB டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து மெச்சத் தகுந்த பணி செய்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினருக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் நேற்று 31/07/2021 மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் இருந்தனர்.