திருச்சி – ஆகஸ்ட் – 27,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாருக்
மனநலம் பாதிக்கப்பட்டவரை தனது உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை நேரில் அழைத்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், I.P.S., பாராட்டி பணவெகுமதி அளித்தார்
அரியலூர் மாவட்டம் விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு முகவரி தெரியாமல் இருந்த காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியைச்சேர்ந்த ஆனந்தி அங்கம்மாள் என்பவரை சிறப்பு முயற்சி செய்து அவரது உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்த அரியலூர் மாவட்ட காவல்துறையைச்சேர்ந்த காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி மாவட்ட குற்ற பதிவேடு கூடம் I/C குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, கிருஷ்ணமூர்த்தி ஷேக்அலி ஆகியோரை இன்று காலை திருச்சி மத்தியமண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., நேரில் அழைத்து பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதமாக பணவெகுமதி வழங்கினார்