84.3 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் போலி உதவி கமிஷனர் கைது - மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

திண்டுக்கல் – ஆகஸ்ட் -03,2021

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு செய்து தன்னை பெரிய அதிகாரி போல்‌‌‌ வலம் வந்து கொண்டிருந்தவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ரவளிப்‌‌‌ரியா ஐ.பி.எஸ்‌‌‌

இவன்யாரென யாருக்காவது தெரிகிறதா பல பேருடைய முகநூல் நட்பு வட்டத்தில் Vijayan C என்ற ஐடியில் நண்பனாக கண்டிப்பாக இருப்பான்
போலி அஸிஸ்ட்டண்ட் கமிஷனரை சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து TN 37; G-0515 என்ற வகனம் வந்தால் நிறுத்த கோரி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சங்கச்சாவடிக்கு இரவு 8.40 மணிக்கு சுங்கச்சாவடிக்கு வந்தடைந்த TN 37; G-0515 என்ற வாகனம் சைரன் விளக்கு வைத்து காவல் என எழுதப்பட்டு உயரதிகாரி வாகனம் போல் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பணியிலிருந்த அலகுராஜா என்ற காவலர் வாகனத்தை மறித்து விசாரித்த போது வாகனத்திலருந்து இறங்கி விஜயன்- 41 என்ற நபர் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது விஜயன் தான் அஸிஸ்ட்டண்ட் கமிஷ்னர் என்றும் க்ரைம் ட்யூட்டிக்கு வந்ததாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் அடையாள அட்டை கேட்ட போது இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் விஜயன் வைத்திருந்த துப்பாக்கியை அந்தப் பகுதியில்தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் தலைமையில் கைது செய்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்திய காரையும் காவல் நிலையம் எடுத்து வந்து சோதனை செய்ததில் போலி சீருடை,போலி அடையாள அட்டை இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட அளவிலான காவல் உயரதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டதில் சென்னை கொளத்தூர் தென்பழனிநகர், ஜீவா தெரு சுகாசினி அப்பார்ட்மெண்டில் வசித்துவரும் சின்னப்பையன் மகன் விஜயன் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் போலியாக பயன்படுத்தி வந்த புதிய போலீஸ் ஜீப் கோவை செக்கானபாளையம் நடுவீதியைச் சேர்ந்த ஜெயமீனாட்சி (த/பெ சுந்தரமூர்த்தி) என்பவரது ஜீப் ஆகும். இந்த வாகனத்தின் உண்மையான பதிவெண் TN 37 ; DJ 0515 என பதிவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. விஜயன் இந்த ஜீப்பில் போலியாக பதிவெண்ணை மாற்றி காவல் உயரதிகாரி வாகனம் போல் சைரன் விளக்கு மாட்டி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் போலியாக காவல் அதிகரிகளின் அடையாள அட்டை போன்று தானே போலியாக அடையாள அட்டை விஜயன் தயாரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி துப்பாக்கியை பயன்படுத்தி வந்தாதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து IPC -420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்ட ADSP கமலேசன் மற்றும் Dsp-க்கள் சுகுமார், இராஜபாண்டி ஆகியோர் தலைமையில் தீவிர விசாணை மேலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எத்தனை நாட்களாக போலி அளிஸ்ட்டண்ட் கமிஷ்னராக வளம் வருகிறார். யாரேனும் இவரால் மோசடி செய்யப்பட்டுள்ளனரா , இவர் பின்னனியில் உள்ளவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருது. துணிச்சலாக போலியாக தான் அஸிட்டண்ட் கமிஸ்னர் என கூறி வலம் வந்து போலீசாரிடம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்