78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி முன்பகை காரனமாக ஒருவர் கொலை 4,பேர்‌‌‌ உடனடி கைது

முன்பகை காரனமாக ஒருவர் கொலை 4,பேர்‌‌‌ உடனடி கைது

தூத்துக்குடி – ஆகஸ்ட் -07,2021

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை – உடனடியாக எதிரிகள் 4 பேர் கைது .

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) என்பவரை நேற்று (06.08.2021) இரவு தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன்பு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், முதல் நிலை காவலர்கள் பென்சிங், சாமுவேல், மாணிக்காராஜ், செந்தில்குமார், திருமணி மற்றும் காவலர் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில், தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தங்ககார்த்திக் (25), தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் அருண்குமார் (22), தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அந்தோணி முத்து (21) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (21) ஆகிய 4 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக நடராஜனை கத்தியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரைள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்