80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் சென்னை "கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை....

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

சென்னை – ஆகஸ்ட் -01,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, இறந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிய சென்னை பெருநகர காவல் ஆளிநர்களில் 1.ஜெ.ஈஸ்வரன், பல்லாவரம் சரக உதவி ஆணையாளர், 2..சி.ஜெயகுமார், மணலி போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 3.ஜான் ரூபஸ்,(S-11 தாம்பரம் போக்குவரத்து கா.நி.), 4..ரவிச்சந்திரன் (நவீன கட்டுப்பாட்டறை), 5.பத்மநாபன் (T-3 கொரட்டூர் கா.நி.), 6.அமல்ராஜ் (C-2 யானைகவுனி போ.பு.பி), 7.செல்வம் (ஆயுதப்படை), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8.அமல்தாஸ், (T-15 SRMC கா.நி.,), 9.குபேரன் (SCP), 10.ரவி (R-9 வளசரவாக்கம் கா.நி.), 11..இளங்கோவன் (G-1 வேப்பேரி போ.கா.நி.), 12செல்வகுமார் (போக்குவரத்து திட்டமிடல்), தலைமைக் காவலர்கள் 13.தேவன் (நுண்ணறிவுப்பிரிவு), 14.கோபிநாத் (நசரத்பேட்டை கா.நி.), 15.சதிஷ்பாபு (ஆயுதப்படை), 16.மோகன் (SCP), 17..கார்த்திக்கேயன் (போக்குவரத்து கட்டுப்பாட்டறை), முதல்நிலைக் காவலர் 18.பாலசுப்ரமணியன் (V-1 வில்லிவாக்கம் கா.நி.,) காவலர் 19.விக்டர் பென்னட் (ஆயுதப்படை) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் தன்னுயிர் அர்ப்பணித்தனர்.
காவல் பணியின்போது, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 19 காவல் ஆளிநர்களுக்கு 31.07.2021 அன்று மதியம், எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அர்ப்பணிப்புடன் முன்களப்பணியாற்றி கொரோனா தொற்றால் மறைந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர்.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., (தெற்கு), செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு),பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து).பி.சி.தேன்மொழி, இ.கா.ப., (CCB), இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்