அரியலூர் – ஆகஸ்ட்-01,2021
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் Police Salary Package Scheme -ன் மூலம் 30 லட்சம் ரூபாய் தொகைகான செலானை இறந்தவரின் குடும்பத்திற்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.