94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி போலிசாருக்கு கவாத்து உடற்பயிற்ச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

போலிசாருக்கு கவாத்து உடற்பயிற்ச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி – ஆகஸ்ட் -27,2021

தூத்துக்குடியில் இன்று ரோச் பூங்காவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகரம், ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் உட்கோட்ட தலைமையிடங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் இன்று காவல்துறையினருக்கு அந்தந்த உட்கோட்ட தலைமையிடங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது பொதுமக்கள் அனைவரும் நல்லவர்கள், அதில் யாராவது ஒரு சிலர் மட்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள், இவர்களை மனதில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும், சட்டத்தை கடைபிடிப்பதிலும், அரசு விதிமுறைகளை கடைபிடிப்பதிலும் நாம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாம் பொதுமக்களில் ஒருவராக இருந்து, அவர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து செயல்படவேண்டும், பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற வரையில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உதவிகள் செய்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும், உங்களுக்கு பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் குறைகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவியுங்கள், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அதே சமயம் தவறு செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்று அறிவுரை வழங்கினார்.

இப்பயிற்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் மற்றும் குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்