தேனி – ஆகஸ்ட் – 15,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு சேவை செம்மல் விருது…..
தேனி மாவட்ட மக்கள் இயக்கத்தலைவர் லெப்ட் பாண்டி அவர்கள் கொரோனா காலத்தில் தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், மலைவாழ் மக்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்கள் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்… அந்த சமயத்தில் வீடு வீடாக சென்று உணவு மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் வாங்கி கொடுத்து ஏழைகளின் பசியை ஆற்றி வந்தார் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று மன உறுதியோடு செயல்பட்டு வந்தார்.. இதைக்கண்ட மாவட்ட எஸ்பி டேங்ரோ பிரவீன் உமேஷ் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.. இதையொட்டி இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அவருக்கு சேவை செம்மல் விருது மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார். பின்பு அவர் உரையாற்றிய போது கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்…. கோரோனா விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்…