தென்காசி – ஆகஸ்ட் -12,2021
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ஶ்ரீ தாமரை விஷ்ணு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வரவேற்கும் விதமாக கேக் வெட்டி வரவேற்றார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர் கூறுகையில் இத்தகைய உயிர்கொல்லி நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.