திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக அமைய இருக்கும் நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.மாவட்ட ஆயுதப்படை புதிய நிர்வாக கட்டித்திற்கான ஒப்புதல் அரசால் அளிக்கப்பட்டு புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அருகிலேயே அமைய உள்ளது. இதற்காக பூமி பூஜை இன்று ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபினபு இ.கா.ப., மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,இ.கா.ப., கலந்துகொண்டு புதிய நிர்வாக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி, பொறுப்பு மாவட்ட ஆயுதப்படைதிருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.