81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி "கொரனா மூன்றாம் அலையை தவிர்க்க அரசுடன்‌‌‌ பொதுமக்கள் துணை நிற்க வேண்‌‌‌டும்‌‌‌ துணை...

“கொரனா மூன்றாம் அலையை தவிர்க்க அரசுடன்‌‌‌ பொதுமக்கள் துணை நிற்க வேண்‌‌‌டும்‌‌‌ துணை கமிஷனர் வேண்டுகோள்….

திருச்சி – ஆகஸ்ட் – 08,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்; தொற்று மெதுவாக அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிகளவில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு 09.08.2021 முதல் 23.08.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.
நேற்று (07.08.2021) மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு சட்‌‌‌டம்‌‌‌ ஒழுங்‌‌‌கு துணை கமிஷனர்‌‌‌ சக்திவேல், தலைமையில்; திருச்சி மாநகர ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து குழந்தைகள் உடல் நலனில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென குடும்பதாரின் உடல் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. திருச்சி மாநகரில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்