திருநெல்வேலி – ஆகஸ்ட் – 26,2021
நெல்லை பாளையில் வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய எதிரிகளை 30 நிமிடத்தில் சுற்றிவளைத்த நெல்லை மாநகர போலீசார்.
நெல்லைமாநகரம்பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சேர்மன் என்பவருக்கும் சுந்தரபாண்டியன் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக 25-08-2021 ம் தேதியன்று, இரவு திம்மராஜபுரம் சாலையில் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, சேர்மன் என்பவரின் தம்பியான இசக்கிமுத்து என்பவர் தனது அண்ணனுக்காக கையில் கத்தியுடன் தாக்க முயன்ற தம்பி இசக்கிமுத்து மற்றும் அவரது அண்ணன் சேர்மன் ஆகிய இருவரையும், திம்மராஜபுரம் சேர்ந்த சுந்தரபாண்டியன், பழனி, ஸ்ரீராம் குமார், மாணிக்கராஜா, முத்துக்குமார் மற்றும் நம்பி நாராயணன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கியதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். மேலும் சேர்மன் என்பவருக்கும் அரிவாளால் தாக்கியதில் கழுத்து மற்றும் தலை கைகளிலும் ரத்த காயங்களுடன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சேர்மன் கொடுத்த புகாரின் பேரில், பாளை காவல் ஆய்வாளர் .முருகன் வழக்கு பதிவு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை , நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் அவர்கள், பாளை உதவி காவல் ஆய்வாளர் அருணாச்சலம் தனிப்படை போலீசார் மற்றும் பாளை போலீசார் ஒன்றிணைந்து புகார் கொடுத்த 30 நிமிடத்தில் சுற்றிவளைத்து, சம்பந்தபட்ட ஆறு பேரையும் கைது இன்று சிறையில் அடைத்தனர்