திருநெல்வேலி – ஆகஸ்ட் – 22,2021
இந்தியாவின் 75 – வது சுதந்திரத்தின விழாவை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பேரணி வந்த (CRPF) மத்திய சேமக் காவல் படை வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் 20 பேர் ஆசாதி அம்ருத் மஹோத்ஸவம்) சைக்கிள் பேரணி மேற்கொண்டனர் இன்று காலையில் கன்னியாகுமரியில் தொடங்கி மாலையில் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு CRPF துனை கண்காணிப்பாளர் முகமது பயாஸ், ஆய்வாளர் ஐய்யப்பன் தலைமையில் வந்தனர். CRPF வீரர்களை நெல்லை மாநகர துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்குசுரேஷ் குமார் வரவேற்றார்கள். உடன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி ஆய்வாளர்கள் ரமேஷ்கண்ணா, பேச்சிமுத்து, டேனியல் கிருபாகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.இந்த நிகழ்வில் நோவா ஸ்போர்ட்ஸ் கழகம் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகம் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை திருநெல்வேலி சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்