தேனி – ஆகஸ்ட் -05,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல் துறை சார்பாக கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார், தலைமை தாங்கி்னார் சிறப்பு விருந்தினராக, ஏ.டி.எஸ்.பி சங்கரன் கலந்து கொண்டு எதிர்வரும் கரோனா வைரஸ் தொற்று நோய் மூன்றாவது அலை குழந்தைகளையும் அதிக அளவு பாதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை எடுத்துரைத்துள்ளது அதன்படி குழந்தைகளை வீட்டிலேயே இருக்க வையுங்கள் ஒருவருக்கொருவர் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும் போது கிருமிநாசினி பயன்படுத்துதல் நாளொன்றுக்கு குறைந்தது 5 முறையாவது சோப்பு போட்டு கைகளை உங்கள் முக்கியமாக உணவுப்பொருட்கள் உண்ணுவதற்கு முன் சோப்பு போட்டு கையை இரண்டு நிமிடம் கழுவ வேண்டும் கொரோனா வைரஸ் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டும் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் பொதுமக்கள் பெற்றோர்கள் குழந்தைகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஏடிஎஸ்பி சங்கரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.. பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி இணைத்து கலந்தாய்வு கூட்டத்தை இரண்டு பேரும் சேர்ந்து வழி நடத்தி நிறைவில் பொதுமக்களுக்கு டீ பிஸ்கட் வழங்கினார்கள்…பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் பொது மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது… நிறைவாக டிஎஸ்பி முத்துக்குமார் பொதுமக்களிடமும் பெண்களிடமும் கொரோனா விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் நன்கு அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.. மாஸ்க் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு மாஸ்க் வழங்கினார்