புதுக்கோட்டை – ஆகஸ்ட் – 20,2021
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப.,உத்தரவின் பேரில் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்ஸிஸ் மேரி, உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் பொதுமக்களாகிய இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு முக்கவசம் வழங்கியும், மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சேர்ந்து ஆயுதப்படை SDRF பயிற்சியாளர்களை கொண்டும் பழைய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலை வழியாக கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்குராஜ வீதி, பழனியப்பா கார்னர், மேலராஜ வீதி, ஆயதபடை ஜங்சன் வழியாக பழைய பேருந்து ஆட்டோ நிறுத்தம் வரை தொடர் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேனீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்