அரியலூர் – ஆகஸ்ட் – 26,2021
மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு முதல் இரண்டு பரிசுகளும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு இரண்டு பரிசுகளும் மாதந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார் . அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தூய்மையான பராமரிப்பிற்காக 26/08/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கான முதல் பரிசாக பண்டக பிரிவிற்கு சுழல் கோப்பையும் 2000 ரூபாய் பரிசும், இரண்டாவது பரிசாக “பி” சம்பளபிரிவு பிரிவுக்கு ரூபாய் 1000 மற்றும் சுழல் கோப்பையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார். பிற பிரிவுகளில் முதல் பரிசாக 2000 ரூபாய் மற்றும் சூழல் கோப்பையை சிறுவர் குற்ற தடுப்பு பிரிவுக்கும், 2 -வது பரிசாக 1000/- ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார். விஜயகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் காவல் ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.