திருநெல்வேலி – ஆகஸ்ட் – 23,2021
பேருந்தில் கேட்பாரற்று கிடந்த அசல் பத்திரங்களை நேர்மையுடன் ஒப்படைத்த நபரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்
தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி வந்த பேருந்தில் இன்று காலை, கேட்பாரற்று கிடந்த அசல் பத்திரங்கள் மற்றும் அசல் ஆவணங்கள் அடங்கிய கவரை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியபோது பேருந்து இருக்கையில் கிடந்த கவரை எடுத்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் ஒப்படைத்த, பாளை கிறிஸ்து ராஜா பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் நேர்மையை துணை ஆணையாளர் பாராட்டி கௌரவித்தார்
குறிப்பு : அசல் பத்திரங்கள் தவறவிட்ட நபர்கள் சரியான ஆதாரங்களை காட்டி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளவும்.