சென்னை – ஆகஸ்ட்-04,2021
குமரன் நகர் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது, காணாமல் போன 82 வயது முதியவரை மீட்டு, அவரது மகனிடம் ஒப்படைக்க உதவிய ராஜேந்திரன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
குமரன் நகர் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், கடந்த 19.07.2021 அன்று இரவு அசோக்நகர், 11வது அவென்யூ அருகே ரோந்து பணியிலிருந்தபோது, அங்கு சுமார் 82 வயது மதிக்கத்தக்க முதியவர் வழி தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மேற்படி முதியவரை மீட்டு விசாரணை செய்ததில், அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் முதியவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் காணாமல் போனதாக தகவல் தெரிவித்து ரோந்து வாகன பொறுப்பு அதிகாரிகளிடம் அலெர்ட் செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் காணாமல் போனவரின் புகைப்படத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாட்ஸ்அப் மூலம் பெற்று சரிபார்த்த போது, மீட்கப்பட்ட முதியவர் தேனாம்பேட்டை பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, (வ/82), என்பதை உறுதி செய்து முதியவரை தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து முதியவர் கிருஷ்ணமூர்த்தியை அவரது மகனிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
இரவு ரோந்து பணியின்போது, காணாமல் போன 82 வயது முதியவரை மீட்டு, அவரது மகனிடம் ஒப்படைக்க உதவிய ராஜேந்திரன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.