அரியலூர் -ஆகஸ்ட் – 15,2021
தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை :
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், இன்று (15.08.2021) நடைபெற்ற “சுதந்திர தினவிழாவில்” மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, இ.ஆ.ப. தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
சான்றிதழ் வழங்கிபாராட்டு
தொடர்ச்சியாக, சமாதான புறாக்களை பறக்கவிட்டு, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களை பறக்கவிட்பட்டது .மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 89 ஆயிரத்து 650 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலர்களுக்கும், 262 அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்ட வளர்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிகள் செயல்படுத்தப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விழிப்புணர்வு வாகனம் துவக்கம் :
தொடர்ந்து, மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஸ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர் மற்றும் சுகாதாரத்துறை, வட்டாட்சியர்கள்;, துணை ஆட்சியர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சிதுறை, காவல்துறையினர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.