கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 03,2021
கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர், திருப்பூர் மாநகர துணை ஆணையர்,கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று (02.08.2021) ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை மாவட்டக் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கப்பட்டது. கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 450 நபர்களில் 272 நபர்கள் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி,கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் சரிபார்த்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
இவ்உடற்தகுதி தேர்விற்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 300 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.