திண்டுக்கல் – ஆகஸ்ட்-10,2021
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் 9 கீரனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் .செல்வம்,
முதல்நிலைக் காவலர் .கார்த்தி மற்றும் ஊர்க்காவல் படையினர் அசோக்,
மகுடீஸ்வரன் ஆகியோர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் நாட்டு துப்பாக்கி ஒன்றும், கருமருந்து ஒரு கிலோ மற்றும் 1/2 கிலோ பால்ரஸ் ஆகியவற்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.மேற்படி காரையும், நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றி 6 எதிரிகளையும் கைது செய்து சிறப்பான பணி புரிந்தமைக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்து சான்றிதழ்கள் வழங்கினார்