தூத்துக்குடி -ஆகஸ்ட் ,15,2021
செய்தியாளர்: ஷேக் ரிபாய்
தவ்ஹீத் ஜமாத் சார்பில் இரத்தான முகாம் :
இன்று காலை 10.30 மணியளவில்
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வார்திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அசாருதீன் தலைமையில், ஆழ்வார்திருநகரி கிளை நிர்வாகிகள் நவாஸ், ரியாஸ், இப்ராஹீம் மற்றும் அப்துஸ்ஸமத் முன்னிலையில் நடைபெற்றது.
டி.எஸ்.பி பங்கேற்பு :
இதில் சிறப்பு விருந்தினராக ஶ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தார்
மேலும் இந்நிகழ்ச்சியில் TNTJ தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள் அப்துல் ஹமீத், அக்தார் அய்யூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்ட மருத்துவரணி செயலாளர் ரஷீத் காமில் தலைமையில் கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்ததானத்தின் அவசியம் :
அதைத் தொடர்ந்து அரசு பொது நல மருத்துவர் சாந்தி இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் இரத்த தான சேவையின் தேவை குறித்தும் விளக்கி பேசினார்
இந்நிகழ்ச்சியில் சுமார் 45 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 50,பேர் இரத்த தானம் செய்தனர் முகாமில் கலந்து கொண்டு , இரத்ததானம் செய்த அனைவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.