திண்டுக்கல் – 27,2021
திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தற்போது ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு இணையவழி மூலம் கல்வி கற்பிப்பதால் குழந்தைகள் தவறான பாதையில் சென்று விடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மேலும் ஆசிரியர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
மேலும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்