கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 15,2021
கோவை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய
காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாசினி,
கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆனந்த ஆரோக்கியராஜ், தமிழ்மணி,
ஆய்வாளர்கள்-3,
உதவி ஆய்வாளர்கள்-6,
சிறப்பு சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-2,
தலைமை காவலர்கள்-6,
முதல் நிலை காவலர்கள்-3 மற்றும்
ஊர்க்காவல் படை காவல்துறையினர்-2
ஆகியோர்களுக்கு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இ.ஆ.ப., பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். மேற்படி காவல்துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்.