தூத்துக்குடி – ஆகஸ்ட் – 28,2021
தென்மண்டல காவல்துறை இடையிலான துப்பாக்கி
சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையமான வல்லநாடு பயரிங் ரேஞ்சில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் மண்டலத்தை சேர்ந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணைத் தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப., தனிநபர் பிஸ்டல் சுடும் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷிங்கிற்க்கு பரிசு கோப்பையும், கேடயமும் வழங்கி காவல் துறை தலைவர் கௌரவித்தார்.