தூத்துக்குடி – ஆகஸ்ட் – 31,2021
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜ் மஹாலில் இன்று தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும், அதே போன்று ரவுடித்தனம் செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் என எந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
மேலும் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலைய பணிகளை சட்டத்திற்குட்பட்டே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் காவல்துறையினரின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்றும் கூறினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உட்பட ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.