சென்னை – ஆகஸ்ட் – 16,2021
ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பங்குபெற்ற காவல்துறையினர் தங்கம்¸ வெள்ளி மற்றும் வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை பாராட்டும் விதமாக இன்று சென்னை¸ கீழ்ப்பாக்கம் ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி¸ இ.கா.ப.¸ தமிழ்நாடு அரசு அளித்த பரிசு தொகை காசோலையினை வழங்கி¸ மேலும் பல தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகள் கூறினார்.