சென்னை – ஆகஸ்ட் – 20,2021
செய்தியாளர் – கே.நியாஸ்
கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம்
இருப்புப்பாதை காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்சியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையங்களில் இன்று விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கிவைக்கப்பட்டது. இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களை பயண்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சரியான முறையில் பயணிகளுக்கு கொரோனா பரவல் சம்மத்தமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் இரயில் பயணிகளுக்கு கொரோளா நோய்தொற்று பரவன் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது இரயில் பயணிகளுக்கும். இரயில் நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கும் இலவசமாக முக கவசம், பழரசம், கிருமிநாசிளி மற்றும் விழிப்புனர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மூலம் பயணிகள் இரயில் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தையின் அம்சங்கள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொராளா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க பயணிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கிருமி நாசிளியை கொண்டு கைகளை சுத்தம் செய்வது மற்றும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்வது சம்மந்தமாக விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிரச்சாரத்தின் நோக்கம்
காவல்துறை கூடுதல் இயக்குனர், அமலாக்கம் பொறுப்பு இருப்புப்பாதை சந்தீப் ராய் ரத்தேர், இ.கா.ப இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 47 இருப்புப்பாதை காவல் நிலையங்களிலும் இன்றிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளார் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் இரயில் பயணிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவுவதை தடுப்பதும் ஆகும். மேலும் கோவிட் தொற்றுநோய் பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து பரப்புவதே எங்கள் நோக்கம் மற்றும் கோவிட்க்கு எதிரான போராட்டத்தில் எந்தவித தளர்வும் இருக்கக்கூடாது என்பதாகும்.
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது பயணிகளுக்கு 25000 முக கவசங்கள், கிருமிநாசிளி மற்றும் குளிர்பாணங்கள் இவைசமாக ARANYA Foundation & NGO மற்றும் அதன் நிர்வாக அறங்காவலர் ஷில்பம் கபூர் ரத்தோர் சமூக ஆர்வளர் அவர்களால் இவைசமாக வழங்கப்பட்டது.
ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, காவல்துறை கூடுதல் இயக்குனர், அமலாக்கம் பொறுப்பு இருப்புப்பானத, கல்பனா நாயக், இ.காப காவல்துறை தலைவர், இருப்புப்பாதை, ஜெயகவுரி, இ.கா.ப, காவல்துறை துணை தலைவர், இருப்புப்பாதை, அதிவீரபாண்டியன், காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை திருச்சி, பொறுப்பு சென்னை, மற்றும் ஷில்பம் கபூர் ரத்தோர் நிர்வாக அறங்காவலர் ARANYA Foundation மற்றும் பலர் பங்கேற்றனர்.
தெற்கு இரயில்வே மற்றும் இரயில்வே பாதுகாப்புபடை ஆகியோர் முழு மனதுடன் இந்த பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள். அரசு இருப்புப்பாதை காவல் மற்றும் இரயில்வே பாதுகாப்புபடை காவலர்களால் விழப்புனர்வு தெருகூத்துநாடகம் நடத்தபட்டது