79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் ஆக்டிவ்,ஆக்‌‌‌ஷன்‌‌‌ , அலார்ட் எஸ்.பி சீனிவாசனின் வெற்றி பார்முலா

ஆக்டிவ்,ஆக்‌‌‌ஷன்‌‌‌ , அலார்ட் எஸ்.பி சீனிவாசனின் வெற்றி பார்முலா

திண்டுக்கல் – ஆகஸ்ட் – 04,2021

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்ற உடன் போலீஸ் மீடியா தமிழ் செய்‌‌‌தி நிறுவனத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு அளித்த பேட்‌‌‌டியின்‌‌‌ போது கூறியதாவது

காவல்துறையில் நான் முதல் பணியை தஞ்சை மாவட்டம் வல்லம் சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக தொடங்கி பின்னர், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர். தென்காசி காவல் துணைக்கண்காளிப்பாளர். உதவி ஆணையர் திருச்சி கோட்டை மற்றும் பொன்மலை, கூடுதல் காவல் துணைகாணிப்பாளராக திண்டுக்கல் மற்றும் திருச்சி ஊரகம் ஆகிய இடங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினேன்‌‌‌ பின்னர் திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியாற்றினேன்‌‌‌ .

தன்னுடைய எளியை நேர்மையான அணுகுமுறை; விரிவான மக்கள் தொடர் பெரும்பகுதி நேரம் சுற்றாய்வு மேற்கொண்டு குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கை பேணிக்காத்தல், போக்குவரத்து மேம்பாடு என திறம்பட பணியாற்றி அரியலூர் மாவட்ட மக்கள் நன்மதிப்பை பெற எனக்‌‌‌கு உதவியது

மேலும் கடந்த மாதம் திருவாரூர் அருகே வங்கி ATM ஒன்றில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றது. அது சமயம் மிகவும் துரிதமாக செயல்பட்டு அரை மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர்‌‌‌ நான்‌‌‌ ஏற்கனவே பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காவல் பணி சேவையை தொடர உள்ளது சிறப்பான ஒன்றாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்மந்தமான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கொரோனா நோய் தொற்று சம்மந்தமான அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றபடும். குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து சீர்செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்று திறனாளிகள் ஆகியவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்வு காணப்படும்.என்‌‌‌று கூறினார்‌‌‌

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்