80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய மண்டலத்தில் 451,விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றள்ளதாக...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய மண்டலத்தில் 451,விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றள்ளதாக – ஐ.ஜி தகவல்

திருச்சி – ஆகஸ்ட் – 27,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

மத்திய மண்டல ஐ.ஜியின்‌‌‌ அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் இடங்‌‌‌களான 222 (திருச்சி 28, புதுக்கோட்டை 39, கரூர் 15, பெரம்பலூர் 12, அரியலூர் 25, தஞ்சாவூர் 48 திருவாரூர் 27, நாகபட்டினம் 17, மயிலாடுதுறை 11) இடங்கள் (Hotspots) மத்திய மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் முயற்சியாக, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், குழந்தை தடுப்பு கடத்தல் பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் பெண்கள் உதவி குழு காவலர்கள் ஆகியோர் கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து நேரடியாக சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவ இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகின்றனர். இது வரை மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களில் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக திருச்சியில் 71, புதுக்கோட்டையில் 73, கரூர் 38, பெரம்பலுhர் 10, அரியலுhர் 30, தஞ்சாவூர் 104, திருவாரூர் 81, நாகப்பட்டினம் 27 மற்றும் மயிலாடுதுறை 12 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேற்படி விழிப்புணர்வு கூட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களும், அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டு, குற்றங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு காவல்துறையினரால் குற்றங்கள் மேலும் நிகழாத வகையில் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளான தந்தையால் துன்புறுத்தப்படும் குழந்தைகள், கணவன் மனைவி இடையேயான குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதற்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளும் இத்தகைய நேரடி கள ஆய்வின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் சிறார்கள் இந்தக் குழுவினரால் கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது வரையில் மத்திய மண்டலத்தில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் கண்டறியப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலத்துறை மூலம் அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. குற்றச் சம்பவம் நடைபெறும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பாக நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் சர்மிளா, திருத்துறைப்பூண்டி, சந்திரா, தஞ்சாவூர் மற்றும் காந்திமதி, குளித்தலை ஆகியோர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்