தூத்துக்குடி – ஆகஸ்ட் – 08,2021
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இன்று மனு விசாரணை சிறப்பு முகாம் பெட்டிஷன் மேலா நடைபெற்றது – இன்று ஒரே நாளில் 425 மனுக்களுக்கு உடனடி தீர்வு – தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெற்ற சிறப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பணி போன்ற இதர அலுவல்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் அதிக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாலும், இன்று ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் விசாரணைக்கு வர ஏதுவாக இருக்கும் என்பதாலும் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் 14 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து சட்டப்படி உரிய தீர்வு காண காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜேயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மனு விசாரணை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹால், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலு ராணி திருமண மண்டபம் மற்றும் தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அருகிலுள்ள ஆறுமுகநாடார் ராஜம்மாள் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டதிற்கு புதுக்கோட்டை பி. எஸ். பி மேல்நிலைப் பள்ளி மற்றும் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு திருச்செந்தூரில் உள்ள சண்முகர் மஹாலில், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா திருமண மண்டபத்திலும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு கோவில்பட்டி ரகுராம் திருமண மண்டபத்திலும், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு விளாத்திகுளம் முருகையா நாடார் திருமண மண்டபம், புதூரில் உள்ள சுப்புராஜ் திருமண மண்டபம், குளத்தூரில் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபம் மற்றும் எட்டயாபுரத்தில் உள்ள ஆவுடையம்மாள் திருமண மண்டபம் ஆகிய 4 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, தட்டார்மடத்தில் உள்ள விஸ்வாஸ் திருமண மண்டபம் மற்றும் மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஜாய் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 இடங்களில் இந்த பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மவாட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் இன்று உடனடி தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களுக்கு மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் காவல் நிலை ஆய்வாளர் ஜெயசீலன், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற பொதுமக்களின் புகார் மனு மீதான சிறப்பு விசாரணை முகாமில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 99 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, அதே போன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 33க்கு 33ம், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 51க்கு 51ம், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 116க்கு 85ம், மணியாச்சி உட்கோட்டத்தில் 33க்கு 33ம், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 86க்கு 86ம், விளாத்திக்குளத்தில் 45க்கு 45ம், சாத்தான்குளத்தில் 22க்கு 22ம் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 485 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு 425 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்