மயிலாடுதுறை – ஆகஸ்ட் – 24,2021
மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுகுணசிங் இ.கா.ப உத்தரவுப்படி மயிலாடுதுறை மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் இன்று அதிகாலை 03.00 மணியளவில் பாலையூர் காவல் சரகம், நல்லாவூர் ஆற்று பாலம் அருகே உதவி ஆய்வாளர் .குமரவேல், குணசேகரன் மற்றும் கலையரசன் ஆகியோர் வாகன தணிக்கை அலுவல் புரிந்து கொண்டிருந்த போது காரைக்காலில் இருந்து அதிவேகமாக வந்த கடலூர் மாவட்ட பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக சுமார் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், சாராய மூட்டைகளையும் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், மேலும் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியை சேர்ந்த நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இ.கா.ப சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வெகுவாக பாராட்டினார்
பொதுமக்கள் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 94426_26792 என்ற 24 மணி நேர உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்…