80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தாதுமணல் கடத்திய 6,பேர்‌‌‌கைது 39,டன் தாதுமணல் பறிமுதல்

தாதுமணல் கடத்திய 6,பேர்‌‌‌கைது 39,டன் தாதுமணல் பறிமுதல்

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 21,2021

தூத்துக்குடி வி.வி டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ளது. மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முள்ளக்காட்டில் உள்ளது. இந்த குடோனை கடந்த 2017ம் வருடம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தாதுமணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்கண்ணா (49) மற்றும் வருவாய் துறையினருடன் தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள வி.வி டைட்டானியம் கம்பெனி முன்பு சோதனை செய்தபோது, ஒரு லாரியில் 9 மூட்டைகளில் 9 டன் இல்மனைட் தாதுமணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியின் ஓட்டுனர்கள் மீதும், தூத்துக்குடி வி.வி டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மற்றும் அத்துடன் தொடர்புடையவர்கள் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசுக்‌‌‌கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் 5 லாரிகளின் ஓட்டுநர்களான தூத்துக்குடி செக்கடி தெருவை சேர்ந்த வெள்ளசாமி மகன் 1) இசக்கி (49), தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் 2) மாரிமுத்து (39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பட்டறைசாமி மகன் 3) முருகன் (39), தூத்துக்கு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் 4) சடையாண்டி (39), ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்த சூசை மகன் 5) செல்வம் (59) மற்றும் மேற்படி முள்ளக்காடு குடோனின் மேற்பார்வையாளரான கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த சுயம்பு மகன் 6) ராமகிருஷ்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 லாரிகள் மற்றும் 39 டன் இல்மனைட் தாதுமணலையும் பறிமுதல் செய்தனர். பின் மேற்படி குடோனை தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்