சென்னை – ஆகஸ்ட் – 04,2021
ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/-கைப்பற்றிய காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணதாசன், ஐஸ்ஹவுஸ் தலைமைக் காவலர் சதீஷ்குமார், (த.கா.26583) முதல் நிலைக் காவலர் .அருண் ஆரோக்யராஜ் (மு.நி.கா.31742) இரண்டாம் நிலைக் காவலர்கள் மகாராஜா, (கா.எண்.50397), தமிழ் அரசன் ( கா.எண்.50769), மகேஷ் (கா.எண்.50182) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் இராயப்பேட்டை, பெசன்ட் ரோடு, வி.எம் தெரு சந்திப்பு பகுதியில் கண்காணித்து, அங்கு உள்ள பெட்டிக்கடைக்கு குட்கா புகையிலைப்பொருட்களை சப்ளை செய்த 1.சாகுல் அமீது என்பவரை கைது செய்து விசாரணை செய்து, அவர் அளித்த தகவலின் பேரில் 2.தங்கப்பாண்டியன், (வ/44), எழில் நகர் 3.வெங்கடேஷ், (வ/31), இராயப்பேட்டை 4.நீதிமான், (வ/33), அம்பத்தூர் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/- கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.