இராணிப்பேட்டை – ஆகஸ்ட் – 06,2021
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் கலவை அடுத்த செங்கனாவரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த Bolero வாகனத்தை சோதனை செய்தபோது வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிச் சென்றனர், மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கடத்திவரப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவுள்ள 100 cane- களில் 3,500 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இந்த சிறப்பான பணியை மேற்கொண்ட திரு.சரவணமூர்த்தி சிறப்பு உதவி ஆய்வாளர், HC-135 மணி மற்றும் GRI-522 குமரன் ஆகியோர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினையும் வழங்கினார்