திண்டுக்கல் – ஆகஸ்ட் -15,2021
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விசாகன் இ.ஆ.ப அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள். மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி இ.கா.ப ர திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் மெச்சத்தக்க பணிபுரிந்த 35 காவல்துறையினருக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் விசாகன் இ.ஆ.ப வழங்கி பாராட்டினார்